சாதனைகள்

தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம்
Jul 31, 2026

தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம்

எமது பாடசாலையின் தரம் 10 இல் கல்வி கற்கும் லிங்கராஜா தஷ்வின் எனும் மாணவன் தரம் 9,10,11  ஆகிய தரங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சர்வதேச கணிதப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த மாணவர்களை தெரிவு செய்யும் போட்டி பரிட்சையில் ஐந்தாம் இடத்தினை பெற்று மொங்கோலியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச கணித போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார். 

32 நாடுகளில் இருந்து ஏறத்தாழ 600 மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் தஷ்வின் (Merit)விசேட சித்தியினைப் பெற்றுக்கொண்டார். 

எமது பாடசாலைக்கு பெருமை தேடித் தந்த இம் மாணவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.