செய்திகள் & நிகழ்வுகள்

இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வயது 15 பிரிவு 3 ற்கான முதலாவது சுற்று தொடரில் #5வது_போட்டி
Aug 07, 2026

இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வயது 15 பிரிவு 3 ற்கான முதலாவது சுற்று தொடரில் #5வது_போட்டி

இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வயது 15 பிரிவு 3 ற்கான முதலாவது சுற்று தொடரில் #5வது_போட்டி  06,08,2026 அன்று  கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி  இன்னிங்ஸ் மற்றும் #92_ஓட்டங்களால்_வெற்றி_பெற்றது. முதலாவது சுற்று தொடரில் நடைபெற்ற #5_போட்டிகளிலும்_வெற்றி_பெற்று_அடுத்த_சுற்றுக்கு_தெரிவாகியுள்ளது.

5 போட்டிகளிலும்  அணி சார்பாக  துடுப்பாட்டத்தில்  
#ஷாதீன் -  138 ஓட்டங்கள் 
#கிரிஷரன்- 164 ஓட்டங்கள் 
#தினுஷாந்த்  - 167 ஓட்டங்கள்

பந்துவீச்சில்

#பரதன் - 30 இலக்குகள் 
#பவஜிதன்  - 27 இலக்குகள்

இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற 15 வயதுப் பிரிவு சுற்றுத் தொடர்
Jul 15, 2026

இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற 15 வயதுப் பிரிவு சுற்றுத் தொடர்

இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற 15 வயதுப் பிரிவு பிரிவு 3 இற்கான முதலாவது சுற்றுத் தொடர் கடந்த 4ம் திகதி கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

அக்கராயன் மகா வித்தியாலயம் எதிர்  கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 9 இலக்குகளால் வெற்றி பெற்றது.

இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வயது 15 பிரிவு 3 இற்கான முதலாவது சுற்று தொடரில் இரண்டாவது போட்டி கடந்த 7ம் திகதி கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில்  முருகானந்தா கல்லூரி மற்றும்  கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் நடைபெற்றது.

இப்போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

புலம்பெயர்ந்த பழைய மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ குழுக்களில் நீங்களும் இணைந்து கொள்ள.....
Jul 11, 2026

புலம்பெயர்ந்த பழைய மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ குழுக்களில் நீங்களும் இணைந்து கொள்ள.....

அன்புக்குரிய புலம்பெயர்ந்த பழைய மாணவர்களே ,
எமது வித்தியாலயத்தின்  நாடுகளுக்கான புலம்பெயர்ந்த பழைய மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ குழுக்களில் நீங்களும் இணைந்து வித்தியால நூற்றாண்டு விழா மற்றும் ஏனைய செயற்பாடுகளில் நீங்களும் இணைந்து கரங்கொடுங்கள்.

1.இங்கிலாந்தில் வசிப்பவர்கள் இணைந்து கொள்ள:
https://chat.whatsapp.com/FMJGLl1ZuNdILqHShN7jDQ?s=cl&p=a&ilr=4

2.கனடாவில் வசிப்பவர்கள் இணைந்து கொள்ள:
https://chat.whatsapp.com/ESZE3ZuZfvV7JWSXXxFIim?s=cl&p=a&ilr=4

3.பிரான்ஸ் இல் வசிப்பவர்கள் இணைந்து கொள்ள:
https://chat.whatsapp.com/ESZE3ZuZfvV7JWSXXxFIim?s=cl&p=a&ilr=4

4. சுவிஸ் இல் வசிப்பவர்கள் இணைந்து கொள்ள :
https://chat.whatsapp.com/Havr8SZ1Lj5GEPnXoKLMA2?s=cl&p=a&ilr=4

5.ஜேர்மனி இல் வசிப்பவர்கள் இணைந்து கொள்ள : 
https://chat.whatsapp.com/LAQE63Jl0dM0ZXY6T9VnR4?s=cl&p=a&ilr=4

6. ஏனைய நாடுகளில் வசிப்பவர்கள் இணைந்து கொள்ள : 
https://chat.whatsapp.com/ETQ8I2gkfXYDFActG3eBVu?s=cl&p=a&ilr=4

பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
Apr 11, 2026

பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

எமது பாடசாலையின் பழைய மாணவர்களின் அனுசரணையுடன் பாடசாலை சமூகத்தினால் பெருமையுடன் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை(11.04.2026) நடைபெற்றது.

இந்நிகழ்வில் க.பொ.த உயர்தர பரீட்சை 2025 இல் தேசிய மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற மாணவர்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் பிரதான பாடத்துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன் தேசிய ரீதியிலான ஆங்கில போட்டியில் Creative writing 1ம், 2ம் இடங்களை பெற்று சாதனை படைத்த சுவேதனா மற்றும் அமுதவன் ஆகிய உயர்தர மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.

நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட  பல  அதிதிகள் எமது அழைப்பினை ஏற்று கலந்த கொண்டு எமது மாணவர்களை வாழ்த்தினர்.

மேலும், பழைய மாணவர்களினால் "கல்விச் சாதனை விருதுகள் 2026" என்ற கருப்பொருளின் கீழ், தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ரூபா ஒரு மில்லியன் பணப்பரிசும், மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற இரு மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாவும், Merit சித்தி பெற்ற நான்கு மாணவர்களுக்கு தலா 50,000 ரூபாவும், வெற்றி சின்னங்களும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், இச்சாதனைக்கு வித்திட்ட 10 ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.