Apr 11, 2026
பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
எமது பாடசாலையின் பழைய மாணவர்களின் அனுசரணையுடன் பாடசாலை சமூகத்தினால் பெருமையுடன் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை(11.04.2026) நடைபெற்றது.
இந்நிகழ்வில் க.பொ.த உயர்தர பரீட்சை 2025 இல் தேசிய மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற மாணவர்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் பிரதான பாடத்துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன் தேசிய ரீதியிலான ஆங்கில போட்டியில் Creative writing 1ம், 2ம் இடங்களை பெற்று சாதனை படைத்த சுவேதனா மற்றும் அமுதவன் ஆகிய உயர்தர மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.
நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட பல அதிதிகள் எமது அழைப்பினை ஏற்று கலந்த கொண்டு எமது மாணவர்களை வாழ்த்தினர்.
மேலும், பழைய மாணவர்களினால் "கல்விச் சாதனை விருதுகள் 2026" என்ற கருப்பொருளின் கீழ், தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ரூபா ஒரு மில்லியன் பணப்பரிசும், மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற இரு மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாவும், Merit சித்தி பெற்ற நான்கு மாணவர்களுக்கு தலா 50,000 ரூபாவும், வெற்றி சின்னங்களும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், இச்சாதனைக்கு வித்திட்ட 10 ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.