எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் பெருமையுடன் நடாத்திய அகில இலங்கை ரீதியில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை(11.04.2026) நடைபெற்றது.

இந்நிகழ்வில் க.பொ.த உயர்தர பரீட்சை 2025 இல் தேசிய மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற மாணவர்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் பிரதான பாடத்துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன் தேசிய ரீதியிலான ஆங்கில போட்டியில் Creative writting 1ம், 2ம் இடங்களை பெற்று சாதனை படைத்த சுவேதனா மற்றும் அமுதவன் ஆகிய உயர்தர மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.

நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட  பல  அதிதிகள் எமது அழைப்பினை ஏற்று கலந்த கொண்டு எமது மாணவர்களை வாழ்த்தினர்.